விவசாயிகளிடமிருந்து பல கோடி ரூபாய் திருட்டு; தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜய் திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.;
தவெக தலைவர் விஜய் திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் விஜய் பேசியதாவது,
திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோவில் ஆழித்தேர் தான் மனசுக்கு வரும். திருவாரூர் தேர் என்றால் இந்த மண்ணின் அடையாளம்
பல நாட்களாக ஓடாமல் இருந்த இந்த தேரை ஓட்டியது யார்? என்று கூறியது யார் என்று நன்றாக தெரியும். அவரது மகன் முதல்-அமைச்சர் இப்ப்போது என்ன செய்கிறார். நன்றாக ஓடவேண்டிய தமிழ்நாடு தேரை 4 பக்கமும் கட்டையை போட்டு ஆடாமல், அசையாமல் நிப்பாட்டிவிட்டார். இதை பெருமையாக கூறுகிறார். திருவாரூர் கருவாடாக காய்கிறது, அதை கண்டுகொள்ளவில்லை.
முதல்-அமைச்சர் தனது அப்பா பெயரில் பேனா வைக்கிறார். எல்லா இடத்திற்கும் அவர் அப்பா பெயர் வைக்கிறார். ஆனால், அவரது அப்பா பிறந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை. நாகை போன்றே திருவாரூரில் அதிக குடிசை பகுதிகள் உள்ளன. திருவாரூர் பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளும் இல்லை. மருத்துவ கல்லூரியில் உபகரணங்கள் வேலை செய்யவில்லை. திருவாரூர் பஸ் நிலையத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு சாலை இல்லை. இந்த மாவட்ட அமைச்சர் (டி.ஆர்.பி.ராஜா) முதல்-அமைச்சர் குடும்பத்திற்கு சேவை செய்கிறார். மக்கள்தான் முக்கியம் என்று அமைச்சருக்கு புரிய வைக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்றால் உங்கள் குடும்பத்திற்கு மட்டும்தான் என்று கூறவேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுடன் இல்லை.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ. 40 கமிஷன் வாங்குகிறார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ஒரு டன்னுக்கு ரூ. 1000 கமிஷன் வாங்குகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் டெல்டா பகுதி விவசாயிகளிடமிருந்து பல கோடி ரூபாய் திருடியிருக்கிறார்கள். விவசாயிகள் பொய் சொல்லமாட்டார்கள் முதல்-அமைச்சர் அவர்களே. உங்களுக்கு 40க்கு 40 என்றால் தேர்தல் முடிவாக இருக்கலாம் ஆனால் விவசாயிகளுக்கு 40க்கு 40 என்றால் விவசாயிகள் வயிற்றில் அடித்த கமிஷன். ஏழ்மை, வருமை, ஊழல், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம் என்பதே தவெகவின் இலக்கு
இவ்வாறு அவர் கூறினார்.