தமிழகத்திற்கு இது சாபக்கேடு - அண்ணாமலை
தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டிக்கும் விசிகவினர், வழக்கறிஞரை தாக்குகின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார்.;
மதுரை,
மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
காஞ்சிபுரத்தில் மருந்து நிறுவனம் தயாரித்த மருந்தால் ம.பி.ல் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இரு அதிகாரிகளை மட்டும் சஸ்பெண்ட் செய்து தனக்கு இதில் சம்பந்தமில்லை. என அரசு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மருந்து விவகாரத்தில் பதிலளிக்க அரசுக்கு பொறுப்புள்ளது. முதல்-அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். சாதிகளுக்கு எதிரி, சாதிப்பெயரை வைத்து அரசியல் என திமுக இரட்டை வேடம் போடுகிறது.
விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் இருக்கிறது. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சித்தாந்தத்தை விட்டு கூட்டணி சேரலாம். தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டிக்கும் விசிகவினர், வழக்கறிஞரை தாக்குகின்றனர். கருத்து சுதந்திரம் குறித்து திருமாவளவன் பேசுவது நியாமா? கார் மீது நடந்த தாக்குதலுக்கு நான் காரணம் என திருமாவளவன் கூறுகிறார். இதுதான் தமிழகத்திற்கு சாபக்கேடு. பார்த்து முறைத்ததால் நாலு தட்டு தட்ட வேண்டும் என திருமாவளவன் பேசுகிறார்.பாகிஸ்தான் பார்டருக்கு திருமாவளவனை அனுப்ப வேண்டும்.
அவர்கள் தான் முறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்படிபட்ட தலைவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் கமெண்ட் செய்ய முடியாது.தவறு செய்தபின் தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக அண்ணாமலை என பழிபோடுவதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கு ஆர்.எஸ்.எஸ். பாஜக என கூறும் திருமாவின் அரசியல் தரம் தாழ்ந்து மாறியிருக்கிறது. சம்பவத்திற்கு காரணமானோரை கைது செய்தபின் திருமாவளவன் அரசியை விட்டு விலகுவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.