தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;
திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வின்தங்கராஜ் மகன் ஜேம்ஸ்செல்லதுரை (வயது 25) என்பவர், தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.10.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.
அதேபோன்று தூத்துக்குடி தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ்குமார்(25) மற்றும் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் பகுதியை சேர்ந்த தெய்வமுத்து மகன் பாலமுகேஷ்(20) ஆகிய 2 பேரும் கடந்த 11.10.2025 அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.
இந்த நிலையில் மேற்சொன்ன 3 குற்றவாளிகளையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (12.11.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.