சுடுகஞ்சி கொட்டி மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

அடுப்பில் வைக்கப்பட்டிருந்த உலை பாத்திரத்தை குழந்தை பிடித்து இழுத்ததில் சுடுகஞ்சி குழந்தை மீது கொட்டியதால் உடல் வெந்தது.;

Update:2025-09-20 11:39 IST

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள சின்ன வெண்மணி கிராமம் சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு மூன்றரை வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 11-ந்தேதி வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டு உலை பாத்திரத்தை குழந்தை தீபிகா பிடித்து இழுத்து விட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தீபிகாவின் மீது சுடுகஞ்சி கொட்டியதால் உடல் வெந்தது.

வலியால் அலறி துடித்த குழந்தையை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபிகா நேற்று பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்