திருநெல்வேலி: 2 யூனிட் எம்.சாண்ட் மணல் மினிலாரி பறிமுதல்- வாலிபர் கைது

வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், தெற்கு கள்ளிகுளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.;

Update:2025-06-03 16:54 IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், தெற்கு கள்ளிகுளம் அருகே வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஏர்வாடி, எல்.என்.எஸ். புரம், நடுத்தெருவை சேர்ந்த முகேஷ் (வயது 29) என்பவர் ஓட்டி வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் உரிய அனுமதி சீட்டு இன்றி சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணலை ஏற்றிவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன வாலிபரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளியூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உரிய அனுமதியில்லாமல் எம்.சாண்ட் மணலை ஏற்றி வந்த முகேஷை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 2 யூனிட் எம்.சாண்ட் மணலையும், ஒரு மினி டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்