திருநெல்வேலி: பலசரக்கு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காருகுறிச்சியில் பலசரக்குகடையில் கடனுக்கு குளிர்பானம் கொடுக்காத கடை உரிமையாளரை, தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த நபர் அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.;

Update:2025-10-08 16:52 IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே, புதுகுடியைச் சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 39), காருகுறிச்சியில் பலசரக்குகடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த சத்ருகன்(42) கடனாக குளிர்பானம் கேட்டுள்ளார். குளிர்பானம் தர மறுத்ததால் சத்ருகன், சங்கரநாராயணனிடம் தகராறில் ஈடுபட்டு, கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு கடையின் சட்டரை சேதப்படுத்தியும், கீழே கிடந்த கல்லை எடுத்து சங்கரநாராயணனின் அப்பா மீது எறிந்து காயத்தை ஏற்படுத்தியும், கையில் இருந்த அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளார்.

இதுகுறித்து சங்கரநாராயணன் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சத்ருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி பாளை மத்திய சிறையில் அடைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்