திருநெல்வேலி: இட பிரச்சினையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
தேவர்குளம் பகுதியில் சர்ச்சில், சாலமன்ராஜா ஆகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது.;
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம், வடக்கு அச்சம்பட்டி, நடுத்தெருவை சேர்ந்த சர்ச்சில் (வயது 45) என்பவருக்கும் தடியாபுரம், மேல தெருவை சேர்ந்த சாலமன்ராஜா(31) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு நேற்று (9.6.2025) சர்ச்சில், வடக்கு அச்சம்பட்டி கோழி பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சாலமன்ராஜா, சர்ச்சிலை வழிமறித்து அவரை அவதூறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சர்ச்சில் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சாலமன்ராஜாவை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.