திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் ஒரு வாலிபர், ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.;

Update:2025-07-12 22:01 IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, மேலபூவந்தியைச் சேர்ந்த கணேசன் மகன் பாரதி(எ) சூர்யா (வயது 25) என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தாதன்குளம், அண்ணாமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் நல்லமுத்து என்பவரை திருநெல்வேலி ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் வைத்து மிரட்டி, பணம் பறித்துள்ளார். மேலும் அவர் மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், திருநெல்வேலி ஜங்ஷன் சரக போலீஸ் உதவி கமிஷனர் தர்ஷிகா நடராஜன் மற்றும் திருநெல்வேலி ரெயில்வே காவல் வட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி பாரதி(எ) சூர்யா இன்று (12.7.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்