திருப்பூர்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் - பரபரப்பு சம்பவம்

பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.;

Update:2025-11-04 09:11 IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

பல்லடம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, பஸ்சில் பயணித்த பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்