இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 04.01.2026

Update:2026-01-04 09:25 IST
Live Updates - Page 2
2026-01-04 05:58 GMT

இதுக்கு பேரு தான் ராமராஜ்ஜியம்’’ -அண்ணாமலை

``ராம ராஜ்ஜியம் என்பது ராமர் போல ஒருவர் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது அல்ல. ராமர் காலத்தில் மக்கள் எப்படி இருந்தார்களோ, அதேபோல இன்றும் இருக்க வேண்டும். அது தான் ராம ராஜ்ஜியம். அவர்களால் தான் ராமர் ஆட்சிக்கு வந்தார். அதற்கேற்ப நம் குழந்தைகளை நாம் தயார் செய்ய வேண்டும். தேர்தலில் நிற்பவர்கள் கையில் எதுவும் இல்லை. ஓட்டு போடுபவர்கள் கையில் தான் மாற்றம் இருக்கிறது’’- அண்ணாமலை பேச்சு

2026-01-04 05:22 GMT

புதிய ஓய்வூதியத் திட்டம் - விசிக வரவேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம்; சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ள இந்த அறிவிப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் எந்த அளவுக்கு அரசு ஊழியர்களின் மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த அறிவிப்பு சான்று - விசிக தலைவர் திருமாவளவன்

2026-01-04 04:51 GMT

திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

கேரளாவின் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 600 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம் அடைந்தன. சோதனை ஓட்டத்திற்கு செல்லக் கூடிய ரயில் எஞ்ஜினும் தீக்கிரையானது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடந்துவருகிறது

Tags:    

மேலும் செய்திகள்