இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: சற்று நேரத்தில் விசாரணையை தொடங்குகிறார் மதுரை மாவட்ட நீதிபதி
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக, மதுரை மாவட்ட நீதிபதி சற்று நேரத்தில் விசாரணையை தொடங்குகிறார்.
இதனப்டி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவுபடி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உள்ளார்.
திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் உதவிஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்த இடங்களில் நீதிபதி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தவும் நீதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட சென்னையில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: டெண்டர் வெளியீடு
வட சென்னையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 பேருந்து நிறுத்தங்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது. பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர். துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த ஏசி பேருந்து நிறுத்தங்கள் அமைகின்றன.
மேலும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்றும் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9,065-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மன்னார்குடியில் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் இன்று காலை சென்றுகொண்டிருந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எதிர்பாராதவிதமாக மாணவர் மற்றும் அவரது தந்தை மீது மோதியது. இந்த கோர விபத்தில் மாணவர் அமரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
5 நாடுகள்.. 8 நாட்கள்.. வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று (02-07-2025) முதல் 9-ந்தேதி வரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார்.
அனைத்து ரெயில் சேவைகளையும் அளிக்கும் 'ரெயில்ஒன்' செயலி அறிமுகம்
நேற்று 'ரெயில்ஒன்' செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ரெயில்வே தகவல் சேவை மையத்தின் 40-ம் ஆண்டு விழாவில் அவர் அதை அறிமுகப்படுத்தினார். எனவே. ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. இந்த செயலி, ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி கைது
2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றிய அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டு களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவரை தமிழக காவல்துறையின் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், "60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது" என டிரம்ப் கூறியிருப்பது முழு அளவிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இனி ஆதார் கட்டாயம்: அமலுக்கு வந்தது புதிய விதி
இதுவரை புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது. இனிமேல் ஆதார் அடையாள ஆவணம் இன்றி புதிய பான் கார்டு பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.