இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025

Update:2025-09-11 09:32 IST
Live Updates - Page 2
2025-09-11 14:01 GMT

“ரூ.1 லட்சம் நன்கொடை” - நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு

80 வயது முதியவரொருவரும் அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை சமூகவலைதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு என் சார்பில் ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க நினைக்கிறேன்.

முதியவர் வைத்திருந்த தொடர்பு எண்ணில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள், என்னை தொடர்பு கொள்ளவும் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

2025-09-11 13:56 GMT

நாளை பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதியாக நாளை(செப்.12) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

2025-09-11 13:25 GMT

நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறை

நேபாள ராணுவ தலைமையகம் எதிரே ’ஜென் சி’ தலைமுறையினர் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிரதமர் தேர்வு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜென் சி ஆதரவாளரான சுசிலா கார்கியை இடைக்கால தலைவராக தேர்வு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ராப் பாடகர் பாலன் ஷாவை இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

2025-09-11 13:12 GMT

என் மீது அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார் - நடிகர் நாஞ்சில் விஜயன்

நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக திருநங்கை வைஷு புகாரளித்த விவகாரத்தில், எனக்கும் வைஷுவிற்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது, நான் அவரை ஒரு சகோதரி போல் பார்த்தேன், ஆனால் என் மீது வைஷு அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார் என்று நடிகர் நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார்.

2025-09-11 12:48 GMT

டெட் தேர்வு; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு. ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.

2025-09-11 12:29 GMT

சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி

டெல்லி கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விகாஸ் திரிபாத் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி 1983-ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றதாகவும், ஆனால் அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே 1980-ம் ஆண்டில் டெல்லி தொகுதியின் வாக்காளராக அவரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரினார்.

2025-09-11 12:09 GMT

டெட் தேர்வு; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெட் தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி இருந்தார். நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைவர் என்று ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-09-11 11:27 GMT

புறநகர் ரெயில்களில் ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம் - தென்னக ரெயில்வே

சென்னை புறநகர் ரெயில் பயணத்தில் ஒழுக்கத்தை கடைபிடிக்க பயணிகளுக்கு தென்னக ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், புறநகர் ரெயில்களில் பயணிகளின் செயலால் சக பயணிகள் அவதிக்குள்ளாவது வருத்தமளிக்கிறது. ரெயிலில் ஏறாத நபர்களுக்கு இருக்கைகளை பிடித்து வைப்பது மிகவும் தவறான ஒன்று. எதிர் இருக்கைகளில் கால்களை வைத்துக்கொண்டு பயணிப்பது ரெயில்வே விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். என தென்னக ரெயில்வே அறிவுறுத்தி உள்ளது.

2025-09-11 11:24 GMT

17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர்,ஈ ரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-11 10:58 GMT

சட்டத்தை மதித்து நடப்போம் - த.வெ.க.வினருக்கு விஜய் உத்தரவு

ஆளுங்கட்சி செய்வதை செய்யட்டும். நாம் அனைவரும் சட்டத்தை மதித்து நடப்போம். சட்டத்தை மீறி எந்த செயலிலும் த.வெ.க.வினர் ஈடுபடக் கூடாது. தமிழகம் முழுவதும் நாம் நடத்த இருக்கும் மக்கள் சந்திப்பு தடைகளை கடந்து வெற்றியை நோக்கி நமது லட்சிய பயணம் தொடரும் என விஜய் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்