மகளிர் உலகக்கோப்பை: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு.. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம்
இந்த தொடரில் பணியாற்றும் நடுவர்களின் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த உலகக்கோப்பை போட்டியில் பணியாற்றும் நடுவர்கள் அனைவரும் மகளிர்களாக இருப்பார்கள் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை: பாகிஸ்தான் - ஓமன் அணிகள் இன்று பலப்பரீட்சை
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கும் இந்த தொடரில் இது முதல் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்க போராடும். எனவே இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை தற்காலிகமாக சேவை நிறுத்தப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும். வாரநாள், சனிக்கிழமை, ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்பட உள்ளது.
துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இதற்கான விழா காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
2023ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே மோதல்கள் தொடங்கிய பிறகு மணிப்பூர் மாநிலத்திற்கு முதல் முறையாக பிரதமர் மோடி செல்கிறார்.
ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்க உள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் சுராசந்த்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விருச்சிகம்
குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவர். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை