இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

Update:2025-08-13 09:35 IST
Live Updates - Page 5
2025-08-13 04:45 GMT

பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்


நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.


2025-08-13 04:43 GMT

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்? டிரம்பை சந்திக்க வாய்ப்பு


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபையில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


2025-08-13 04:39 GMT

பராமரிப்பு பணிகள்: போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து

வடகோவை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) போத்தனூர்-மேட்டுப்பாளையம் இடையே பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (எண்-66616) மற்றும் மேட்டுப்பாளையம் -போத்தனூர் இடையே பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (எண் -66615) ரத்து செய்யப்படுகிறது.

2025-08-13 04:36 GMT

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி


மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


2025-08-13 04:35 GMT

மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320 (இன்று)

12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360 (நேற்று)

11.08.2025 - ஒரு சவரன் ரூ.75,000

10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560

09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560

08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760

2025-08-13 04:14 GMT

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?


அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.


2025-08-13 04:12 GMT

"கூலி" படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை?


கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பயன்படுத்தி டிக்கெட்டை ரூ.500 முதல் ரூ.3,000 வரை விற்கின்றனர். மேலும், போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்து வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


2025-08-13 04:08 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. அதில் ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2025-08-13 04:07 GMT

இன்றைய ராசிபலன் - 13.08.2025

விருச்சிகம்

நீண்டநாள் பணி திட்டங்கள் இன்று தொடங்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. சொத்து தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய முன்னேற்றம் காணப்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Tags:    

மேலும் செய்திகள்