இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026

Update:2026-01-16 08:55 IST
Live Updates - Page 4
2026-01-16 04:31 GMT

திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை 


திருவள்ளுவர் தினத்தையொட்டி விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2026-01-16 04:29 GMT

திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது 


நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

2026-01-16 04:27 GMT

சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸ் கைது 


சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

2026-01-16 04:25 GMT

அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து 


மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மாட்டுப் பொங்கலையொட்டி, மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2026-01-16 04:15 GMT

சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..? 


இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2026-01-16 03:43 GMT

சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை 


இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


2026-01-16 03:41 GMT

மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை 


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

தொடர்ந்து 6-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளானர். 

2026-01-16 03:39 GMT

"வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்" - நயினார் நாகேந்திரன் 


திருவள்ளுவர் தினத்தில் அவரின் புகழைப் போற்றி வணங்குவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

2026-01-16 03:38 GMT

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின்! 


திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது.

'அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்! அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு -திருவள்ளுவர்

சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள். இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.

தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

2026-01-16 03:36 GMT

தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் ரத்து  


ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு செல்லும் தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 03679) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை திடீரென ரத்து செய்யப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்