தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் ரத்து
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு செல்லும் தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 03679) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை திடீரென ரத்து செய்யப்படுகிறது.
திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பன்னெடுங்காலமாக வற்றாத படைப்புகளை கொண்டு, சீரிளமையோடு தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து வருகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரசாருடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன், ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் தயார் நிலையில் வாடிவாசல், பார்வையாளர் மாடம், மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியை இன்னும் சற்று நேரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளது. போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தம்பதிகளிடையே அன்பு பெருகும்... இன்றைய ராசிபலன் 16.01.2026
தனுசு
தங்களுக்கு தேவையானவைகளை நிறைவு செய்து கொள்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்