இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

Update:2025-09-16 09:06 IST
Live Updates - Page 6
2025-09-16 03:48 GMT

ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் படத்தில் இணையும் மற்றொரு ''காந்தாரா'' நட்சத்திரம்?

பிரபாஸுடன் 'சலார்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ''என்டிஆர்நீல்'' படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காந்தாரா 2 படத்தில் நடித்து வரும் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. 

2025-09-16 03:48 GMT

கிராண்ட் சுவிஸ் செஸ்: தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்

'பிடே' கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வந்தது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் வைஷாலி 43-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் 'டிரா' செய்தார்.

11-வது சுற்று முடிவில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியும் (6 வெற்றி. 4 டிரா, ஒரு தோல்வி) ரஷியாவின் கேத்ரினோ லாக்னோவும் (5 வெற்றி, 6 டிரா) தலா 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இருப்பினும் அதிக வெற்றி அடிப்படையில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் 8 வீராங்கனைகள் இடையிலான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார். 2-வது இடத்தை பிடித்த கேத்ரினோ லாக்னோவும் கேண்டிடேட்ஸ் இடத்தை உறுதி செய்தார்.

2025-09-16 03:45 GMT

இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக். வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி..?


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. பொது மேலாளர் வாசிம் கானுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆசிய கிரிக்கெட்டுக்கான போட்டி நடுவர் பணியில் இருந்து ஆன்டி பைகிராப்ட்டை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அவரை நீக்காவிட்டால் எஞ்சிய ஆசிய போட்டியில் இருந்து விலகிவிடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025-09-16 03:43 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் வீரர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?



ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் 'இம்பேக்ட் வீரர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சில் 2 விக்கெட் மற்றும் பீல்டிங்கில் ஒரு கேட்ச் பிடித்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2025-09-16 03:41 GMT

ஆசிய கோப்பை: பாக்.அணிக்கு எதிராக அவர்கள் யாரும் விளையாட விரும்பவில்லை - இந்திய முன்னாள் வீரர்


ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

2025-09-16 03:38 GMT

இன்றைய ராசிபலன்: 16.09.2025...நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்


தனுசு

பெண்கள் சக ஊழியர்களுடன் கவனமாக நடப்பது நல்லது. கடின உழைப்பால் முன்னேற்றம் உறுதி. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர். வயதானவர்கள் வெளியே உண்பதை தவிர்த்து வீட்டு உணவை உட்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்


Tags:    

மேலும் செய்திகள்