தென்காசி: பிளாஸ்டிக் குடோனில் 10 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீ
தென்காசி மாவட்டம் சிவசைலம் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணியளவில் தீ ஏற்பட்டது. குடோன் என்பதால் சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது. இந்த விபத்து காரணமாக சுற்றி உள்ள பகுதியில் கரும் புகை சூழ்ந்தன.
நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானநிலையில், அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட காந்தி ராஜன் மீது துறைரீதியாக நடவடிக்கை பாயுமென தகவல் வெளியாகி உள்ளது.
ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு திடீர் நடுக்கம், காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு செய்த பிறகே நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் - அரசாணை வெளியீடு
பனை மரத்தை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவை விலங்குடன் ஒப்பிட்டு விமர்சித்த விவகாரம்: விளக்கமளித்த பாக்.முன்னாள் வீரர்
பாகிஸ்தானை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை 'பன்றி' உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
புதுச்சேரி சட்டசபையில் சலசலப்பு: தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்
புதுச்சேரி சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்தது குறித்து அவையில் விவாதிக்க திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை வலியுறுத்தி அவையில் முழக்கமிட்டு சபாநாயகரை சூழ்ந்து எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். சபாநாயகர் அறிவுறுத்தியும் கேட்காத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோர் குண்டுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து ரோபோ சங்கரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கே.பி.ஒய் பாலா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
நடிகர் பாலா மீதும், காந்தி கண்ணாடி படக்குழு மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
நடிகை சரோஜாதேவி பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது- கர்நாடக அரசு அறிவிப்பு
கன்னட திரைத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.