விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் நாளை மின்தடை
விஜய் பேசுவதற்கு 26 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், விஜய் பேசும் பகுதியில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கை குலுக்க மறுத்த விவகாரம்: பாக். அணியை விளாசிய இந்திய முன்னாள் கேப்டன்
கை குலுக்காததை சர்ச்சையாக்க தேவையில்லை என இந்திய முன்னாள் கபில் தேவ் கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவை குறை சொல்லாமல் கிரிக்கெட்டில் முன்னேறும் வழியைப் பார்க்குமாறு அவர் பாகிஸ்தானை விளாசியுள்ளார்.
மருத்துவமனைக்குள் புகுந்த காட்டுப்பன்றி
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றி. 2 பேரை தள்ளிவிட்டு மருத்துவமனைக்குள் புகுந்த காட்டுப்பன்றியை தீயணைப்புத்துறை மற்றும் பன்றி பிடிப்பவர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல்
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி
இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது. ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை கேட்டு தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது, அந்த நோட்டீசை திருமப் பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூ.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸை மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி. "ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடர்ப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது என்று உத்தரவிட்டார்.
நாளை பேரனின் காதணி விழா: ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கும். பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உள்பட 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே, சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்ட முகமது நபி.. வீடியோ வைரல்
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வீசிய கடைசி ஓவரில் (20வது ஓவர்) தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். 22 பந்துகளை எதிர்கொண்ட முகமது நபி 6 சிக்சர்களுடன் 60 ரன்கள் அடித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 20 மற்றும் 21 நடைபெற இருந்த நாமக்கல் சுற்றுப்பயணத்தை அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.