இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

Update:2025-10-26 09:29 IST
Live Updates - Page 2
2025-10-26 08:18 GMT

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை(அக்.27) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2025-10-26 08:13 GMT

இங்கிலாந்து அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. தனி ஒருவராக போராடி 135 ரன்கள் குவித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2025-10-26 08:08 GMT

50 வயதை கடந்தும் திருமணம் செய்யாத நட்சத்திர நடிகைகள்

50 வயதை கடந்தும் இன்னும் பல நடிகைகள் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்


2025-10-26 08:07 GMT

‘ஆர்யன்’ படத்தின் 2-வது பாடல் வெளியானது

‘ஆர்யன்’ படத்தின் முதல் பாடலான ‘கொல்லாதே கொள்ளை அழகாலே’ சமீபத்தில் வெளியானநிலையில், தற்போது 2-வது பாடல் வெளியாகி இருக்கிறது.


2025-10-26 08:07 GMT

கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2025-10-26 07:57 GMT

விஜயிடம் ஆறுதல் பெற புறப்பட்ட கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர். நாளை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் விஜய்.

2025-10-26 07:56 GMT

தமிழ்நாட்டில் யாருடைய வாக்குரிமையும் பறிக்ககூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது - கனிமொழி எம்.பி.

பீகார் போன்ற பல மாநிலங்களில் SIR-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறித்தது போல, தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பீகார் தேர்தலில் நீதியும், ஜனநாயகமும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

2025-10-26 07:54 GMT

இந்தியா உடனான அமெரிக்காவின் நட்பு பாதிக்காது

பாகிஸ்தான் உடனான உறவுகளால், இந்தியா உடனான அமெரிக்காவின் நட்பு பாதிக்காது. அமெரிக்கா-இந்தியா உறவுகள் ஆழமானது, வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. பயங்கரவாத எதிர்ப்பில் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். 

2025-10-26 07:50 GMT

6 கி.மீ. வேகத்தில் நகரும் மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்கிறது மோந்தா புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 780 கிமீ, ஆந்திராவுக்கு தென்கிழக்கில் 830 கிமீ தூரத்தில் உள்ளது. இன்று மாலை புயலாகவும் 28ஆம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-10-26 07:47 GMT

சூரசம்ஹார விழா-4,000 போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூரில் நாளை நடக்க உள்ள சூரசம்ஹாரத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர், 250க்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.20 மருத்துவர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, 14 ஆம்புலன்ஸுகளும் தயார் நிலையில் உள்ளன; வெளியூர் பக்தர்களுக்காக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் செல்ல 45 இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள் 80 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்