மெட்ரோ ரெயிலில் 10% தள்ளுபடியுடன் வழங்கப்பட்ட 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கான காகித குழு பயணச்சீட்டு வசதி மார்ச் 1-ந்தேதி முதல் திரும்ப பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு மாற்றாக மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கடந்த 6-ந்தேதி ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் கைதான ஹேமராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவ சௌந்தரவல்லி உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்து உள்ளார்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,414 புள்ளிகள் சரிந்து 73,198 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 420 புளிகள் சரிந்து 22.124 புள்ளிகள் வர்த்தகம் நிறைவு பெற்றது. பங்கு சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 8 லட்சம் கோடி இழப்பு என தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக்ப்போர் அச்சம், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18 ஆக குறைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஆண்களில் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான சீனர்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது.
நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2024-25ம் ஆண்டிற்கான பிஎப் வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, 8.25 சதவீதமாகவே தொடரும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO)அறிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே நேரிட்ட மிகப்பெரிய பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 57 பேர் பனிச்சரிவில் சிக்கினர். 10 பேர் மீட்கப்பட்டனர். மானா என்ற பகுதியில் ராணுவ முகாமின் அருகே மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஐடிபிஆர்.,பி.ஆர்.ஓ மற்றும் பிற மீட்புக்குழுக்களால் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார்.