நகரத் தொடங்கிய உலகின் பழமையான பனிப்பாறை
1986-ல் அண்டார்டிக்காவில் இருந்து பிரிந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான ஏ23ஏ மீண்டும் நகரத்தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சுமார் 1 ட்ரில்லியன் எடை கொண்ட இது. லண்டன் நகரத்தை விட 2 மடங்கு பெரியது. இது பல மாதங்களாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது தெற்கு ஜார்ஜியா நோக்கி நகர்ந்து செல்கிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. நல்வாய்ப்பாக தொழிலாளர்களுக்கு எந்த காயமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கடலில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதம் ஆக குறைந்துள்ளது. 2017-18-ல் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 3.2 சதவீதமாக உள்ளதாக மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
தடையை மீறி திருவண்ணாமலை தீப மலையில் ஏறி வழி தெரியாமல் சிக்கி தவித்த பெண்ணை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காரை ஓட்டி வந்த திருவொற்றியூரை சேர்ந்த பிரகதீஷ் (வயது 29) கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் 17 நாட்களாகியும் சுமார் 4 அடிக்கு மேல் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிற்கிறது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை நீரை உடனடியாக அகற்றவேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், அரசியலமைப்புக்கு எதிரான மசோதா. இது நமது நாட்டின் கூட்டாட்சிக்கு எதிரானது. நாங்கள் மசோதாவை எதிர்க்கிறோம் என்றார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு 269 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 198 பேர் மசோதா அறிமுகத்திற்கு எதிராக வாக்களித்தனர்.