இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கோப்புப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்யும் விதத்தில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜெர்சி விற்பனை
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விற்கப்படும் கருப்பு வெள்ளை டீசர்ட்டால் சர்ச்சை
மேட்ச் பிக்சிங் காரணமாக 2016, 2017 சீசன்களில் விளையாட சிஎஸ்கேவுக்கு தடை விதிக்கப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக ஜெர்சிகள் விற்பனை
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகுவதாக கோவையைச் சேர்ந்த நிர்வாகி வைஷ்ணவி அறிவிப்பு
கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும், உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் தவெகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றதாக தகவல் வெளியான நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இருந்து தப்பியதாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்ததால், கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையத்தில் பரபரப்பு
பாகிஸ்தானில் இருந்து வான்வழி, தரைவழி மூலம் வரும் தபால்களின் பரிமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு
சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
"கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து, பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்"
"திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது"
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு தடை
பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும் இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லத் தடை விதித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூன் -1ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் - அடுத்தடுத்து நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலாவதாக, ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் போப் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது..
போப்பாகவே மாறிய டிரம்ப் - சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப் ஆண்டவர் போல் உள்ள ஏ.ஐ. புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில்-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் இன்று 3 மணி நேரம் தாமதம் - தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற 6 நாட்களிலும் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 'வந்தே பாரத்' ரெயில் 3 மணி நேரம் கால தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.