இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சிதம்பரம் அருகே பெருங்காலூர், முகையூர், வடம்பூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பச்சை பயிறு திடீரென பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நனைந்து சேதம் அடைந்துள்ளது. ஈரப்பதத்துடன் இருப்பதால் முளைப்பு தன்மை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாஜகவில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம் முடிவு செய்வதை நாங்கள் பின்பற்றுவோம். பாஜக மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. வாகன கட்டுப்பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவுக்கு கோர்ட்டு விளக்கம் அளித்துள்ளது. மறு ஆய்வு மனு ஏப்ரல் 8-ல் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திரைப்படங்கள், சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள அவர்கள் ரவிக்குமார் (வயது 71) காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் அவர்கள் ரவிக்குமாரின் உயிர் பிரிந்தது.
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 27 சதவீதம் பரஸ்பர வரி விதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். [தமிழகத்தில் மக்கள்ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.