ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால், பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு எதிரொலியாக, மிகப்பெரிய சரிவை கண்டது அமெரிக்க பங்கு சந்தை. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க நிறுவனங்கள் மோசமான சரிவை கண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,280 குறைந்து சவரன் ரூ.67,20க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.160க்கு குறைந்து ரூ.8,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.108 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த தங்கம் விலை, அதிரடியாக சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் சின்ன வெங்காயம், பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி ஆகிய 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 84% பேர் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, செல்போனை பயன்படுத்துவதாக Wakefit (வேக் பிட்) நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து கிராமப்புற மக்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், அவர்கள் பயனடையும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இ-சேவை மையங்கள் மூலம் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதேபோல், டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றாலும், இ-சேவை மையம் மூலமாக ரத்து செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகை பூஜா ஹெக்டே. முன்னதாக நேற்று ஸ்ரீ காளகஸ்தி சிவன் கோவிலிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் வழிபாடு செய்தார்.
கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. விண்ணதிரும் பக்தி முழக்கங்களுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.