தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.560 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.140 உயர்ந்து ரூ.11,320க்கு விற்பனை ஆகிறது.
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள் - லாலு பிரசாத் சூசகம்
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சென்று வாக்கு சாவடியில் இன்று வாக்குப்பதிவு செய்து விட்டு திரும்பினார். அவர் குடும்பத்தினருடன் வாக்கை செலுத்தி விட்டு. அதற்கான சான்றாக கை விரலில் உள்ள அழியாத மையை செய்தியாளர்களிடம் காட்டினார்.
விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்க மாட்டேன் - சீமான்
கூட்டணிக்காக காத்திருக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம். கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை நான் நிச்சயம் செய்ய மாட்டேன். அரசியல் கட்சிகளுக்கு மாற்று என்று கூறிவிட்டு அந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.10 சதவீத வாக்குகளை தனித்து நின்று பெற்ற விஜயகாந்த் கூட்டணி அமைத்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு தான் அவரது வாக்கு சதவீதம் குறைந்தது. எனவே எந்த தேர்தலிலும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது. தனித்து நின்று நாங்கள் நிச்சயம் வலிமை பெறுவோம். ஆட்சி அதிகாரத்தில் அமர்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது.
தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தேர்வு; சென்னையில் நாளை நடக்கிறது
மத்திய அரசு தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு திட்டங்களின் முகவர்களாக சேர்பவர்களுக்கான நேர்காணல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை பொது தபால் முதன்மை அதிகாரி அலுவலகத்தில் நடக்கிறது. 18 வயது நிரம்பியதுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பீகார் சட்டசபை தேர்தலில் மதியம் 3 மணி வரை 53.77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தினர். அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த செப்டம்பரில் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ரூ.7,500 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
டெல்லியில் காற்றின் தரம் வரும் நாட்களில் மோசமடையும் என எச்சரிக்கை
இன்று முதல் 8-ந்தேதி வரை டெல்லியின் காற்ற்றின் தரம் "மிகவும் மோசமாக" இருக்கும் என்று காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. 200 பராமரிப்பு வேன்கள் மூலம் சாலைகளை ஆழமாக சுத்தம் செய்தல், மாசுபடுத்தும் வாகனங்களை சோதனை செய்தல் உள்ளிட்ட மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுடன் கலகலப்பாக உரையாடிய பிரதமர் மோடி
சமீபத்தில் நவிமும்பையில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. புதிய வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தன்னை சந்தித்த இந்திய அணி வீராங்கனைகளுக்கு தன் கைப்பட லட்டு வழங்கி பிரதமர் மோடி மகிழ்வித்தார்.
சோமாலியா கடலோரம் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்
சோமாலியா நாட்டில் சமீப நாட்களாக கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், மால்டா நாட்டு கொடியுடன் கூடிய கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கரையோரம் வைத்து கடற்கொள்ளையர்கள் இன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக இங்கிலாந்து நாட்டு ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த பகுதியில் செல்ல கூடிய கப்பல்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
உலகக்கோப்பை வெற்றி: இந்திய மகளிர் அணிக்கு ஜாக்பாட் - டாடா நிறுவனம் அறிவிப்பு
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐ.சி.சி. சார்பில் ரூ. 39.78 கோடியும், பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக அமைந்துள்ளது.
அதுபோல அணியின் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில முதல் - மந்திரிகள், கிரிக்கெட் வாரியங்களும் பரிசுத்தொகைகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகின்றன.
அந்த வரிசையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி- காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மாடல் கார் நவம்பர் 25-ம் தேதிதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.