இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025

Update:2025-10-08 09:18 IST
Live Updates - Page 3
2025-10-08 07:08 GMT

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய சீமான் - நடிகை வழக்கு முடித்துவைப்பு


விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.


2025-10-08 07:07 GMT

"காந்தாரா கதாபாத்திரத்தை பொதுவெளியில் அவமதிக்க வேண்டாம்"- ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்


காந்தாரா படம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படவில்லை என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.


2025-10-08 06:56 GMT

கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மேல்முறையீடு



கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

2025-10-08 06:54 GMT

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 


காசாவுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2025-10-08 06:53 GMT

இளைஞர் மீது தாக்குதலா..? நடந்தது இதுதான் - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்


இளைஞர் தாக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 


2025-10-08 06:11 GMT

சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்யவும் உத்தரவு


சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.


2025-10-08 06:10 GMT

கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்


விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர்.


2025-10-08 06:08 GMT

அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி


டிரோன் பைலட் உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைதள பக்கத்தில் தோனி அறிவித்தார்.


2025-10-08 06:07 GMT

“காசா இனப்படுகொலையை உடனே நிறுத்துக..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன போராட்டம் நடத்தினர்.


2025-10-08 05:36 GMT

டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: 4 நாட்களாக தவிக்கும் வாகன ஓட்டிகள்


4 நாட்களாக நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்