நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அபிராமபுரத்தில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டில் 8 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள துல்கர் சல்மானின் வீடு மற்றும் கோழிக்கோட்டில் உள்ள சொகுசு கார் ஷோ ரூமிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
சொகுசு கார்களுக்கான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பாமக நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் திருமாவளவன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாமக நிறுவனர் ராமதாசை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் நலம் விசாரித்தார்.
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி அவர் குஜராத் முதல்- மந்திரியாக பதவியேற்றார். அப்போது முதல் தற்போது வரை அவரது பயணம் பற்றிய விவரங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தலைமைப்பதவியில் 25 ஆண்டுகாலம் நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை.. மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மதுவை தெரியாமல் குடிக்க வைத்து பாலியல் தொந்தரவு: நடிகை புகாரில் இயக்குனர் கைது
நடிகை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் கன்னட இயக்குனர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் 93வது தொடக்க தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
விமானப்படை தினத்தன்று அனைத்து துணிச்சலான விமான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். இந்திய விமானப்படை துணிச்சல், ஒழுக்கம் மற்றும் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது. மிகவும் சவாலான சூழ்நிலைகள் உட்பட, நமது வானத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இயற்கை பேரிடர்களின் போது அவர்களின் பங்கும் மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களின் அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் வெல்ல முடியாத மனப்பான்மை ஒவ்வொரு இந்தியரையும் தொடர்ந்து பெருமைப்படுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் இங்கிலாந்து பிரதமர்
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பை வந்தடைந்தார். நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி: செந்தில் பாலாஜி வழங்கினார்
விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் நலம் விசாரித்து, தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். கூட்ட நெரிசலில் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் முதற்கட்டமாக 45 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது அம்மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உடனிருந்தார்.
விஜய் கரூர் செல்ல அனுமதி கோரி டிஜிபிக்கு கடிதம்
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் த.வெ.க. தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார்