இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025

Update:2025-06-11 10:27 IST
Live Updates - Page 2
2025-06-11 11:16 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க 2 வாரங்களில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், ஆலையை இடிக்க கோரியும் சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமா வழக்கு! 

2025-06-11 11:08 GMT

ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

முன்னதாக திமுக நிர்வாகி கோட்டூர்புரம் சண்முகம், முன்னாள் பிஆர்ஓ நடராஜனின் நண்பர் என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்

2025-06-11 11:00 GMT

மணமகன் தாடி வைத்திருந்ததால் திருமணம் செய்ய மறுத்த பெண்

உத்தரபிரேசத்தில் திருமண சடங்கின் போது மணமகன் தாடி வைத்திருந்ததால் திருமணம் செய்ய பெண் மறுத்துள்ளார். இதனையடுத்து மணமகன் மறுநாள் க்ளீன் ஷேவ் செய்து கொண்டு வந்தார். இதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளானது.

2025-06-11 10:30 GMT

பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சிறுவர்கள் கைது

காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக 2 மாணவர்கள் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரும், 19 வயது இளைஞரும் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள், இளைஞர் என 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் சிறுவர்கள் - சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டநிலையில், இளைஞர் - சிறையில் அடைக்கப்பட்டார்.

2025-06-11 10:25 GMT

மனுசி திரைப்பட விவகாரம் - "மறு ஆய்வு செய்யப்படும்" - ஐகோர்ட்டில் சென்சார் போர்டு உறுதி

மனுஷி திரைப்படத்தை பார்வையிட்டு இன்று மறு ஆய்வு செய்யப்படும் என்றும், திரைப்படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சென்சார் போர்டு உறுதி அளித்துள்ளது.

முன்னதாக மனுஷி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து இயக்குனர் வெற்றிமாறன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

2025-06-11 10:19 GMT

ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் - ரெயில்வே அமைச்சகம்

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய இனி ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

இந்த புதிய விதி ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தட்கல் சேவையின் பயன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேர இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

2025-06-11 10:03 GMT

திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்

விருதுநகர், கல்விமடை பகுதியில் கோவில் திருவிழாவில் உணவருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்என பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களாக தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்