9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து. இந்த விபத்தில் உயிரிழந்த சவுண்டம்மாள், கருப்பையா ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
மணிப்பூரில் பெண்கள் தீப்பந்த பேரணி
மணிப்பூரில் கிராம தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடங்பந்த் மற்றும் கௌட்ருக் உள்ளிட்ட பதற்றம் கிடைந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இம்பாலில் தீப்பந்த பேரணி நடத்தினர். பேரணி நடைபெற்ற பாதையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
திமுக ஆட்சியில் உழவர் நலன் காக்கும் திட்டங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு அரசின் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து பார்வையிட்டார். மேலும், ரூ.25.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய அவர், விவசாயிகளால்தான் உணவு கிடைத்து மக்கள் உடல் நலத்தோடு உள்ளனர் என்றும், விவசாயிகளால்தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், காவிரி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். இது தொடர்பான புள்ளி விவரங்களையும் வெளியிட்டார்.
சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்.. புதிய உத்தரவை திரும்ப பெறவேண்டும்: சீமான் வலியுறுத்தல்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியே மக்களுக்கு எதிரான தன்னுடைய புதிய நடைமுறையைத் திரும்ப பெற்றுவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கடுமையான விதிமுறையை விதித்திருப்பது ஏன்? ரிசர்வு வங்கி விதிமுறைகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய தமிழ்நாடு அரசு, தற்போது வணிக வங்கிகளுக்கான நடைமுறையை கூட்டுறவு வங்கிக்குப் பொருத்துவது முறைதானா? என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
உக்ரைனில் நேற்று இரவு ரஷிய படைகள் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்துவதற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொள்வாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.