இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

Update:2025-06-15 09:26 IST
Live Updates - Page 3
2025-06-15 05:04 GMT

கோவையில் கத்திமுனையில் 1.25 கிலோ தங்ககட்டிகள் கொள்ளை.. கேரளா விரைந்த தனிப்படை


தங்க கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். 2 கார்கள், லாரி பிடிபட்ட நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


2025-06-15 05:03 GMT

ஆமதாபாத் விமான விபத்து: உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணி இன்று தொடக்கம் 


ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி இன்று தொடங்குகிறது

வெளிநாட்டவர்களின் சடலங்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

2025-06-15 04:45 GMT

தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது


தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

4ஆம் கட்டமாக நடக்கும் நிகழ்வில் 39 தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு விஜய் பரிசளித்து வருகிறார். 

2025-06-15 04:19 GMT

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

கனமழை எச்சரிக்கை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-06-15 04:14 GMT

குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு தொடங்கியது


குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.

2025-06-15 04:10 GMT

மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.. உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி 7 பேர் பலி?


ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் (7 பேர்) இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமானி மற்றும் 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-06-15 04:08 GMT

ஜெகன் மூர்த்தியை பிடிக்க தனிப்படை அமைப்பு

காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் தலைமறைவான புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன் மூர்த்தியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவரை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு வந்த நிலையில், ஆதரவாளர்களின் கூட்டத்தை பயன்படுத்தி அவர் தப்பி ஓடினார். ஜெகன் மூர்த்தியை கைது செய்யச் சென்ற போலீசாரை தடுத்த அக்கட்சி நிர்வாகிகள் 35 பேர் மீது வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2025-06-15 04:07 GMT

ஈரான் - இஸ்ரேல் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்: டெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு


இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தின் தகவல்படி, டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-06-15 04:06 GMT

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 1,329 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 5,577 கன அடியாக அதிகரித்துள்ளது.105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 83.68 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. நீர் இருப்பு 17.71 டி.எம்.சி. ஆக உள்ளது. கால்வாய் மற்றும் ஆற்றின் வழியே விநாடிக்கு 855 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

2025-06-15 04:05 GMT

முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும்... - பேட் கம்மின்ஸ் பேட்டி


தோல்வி கண்ட பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

எப்போதும் விஷயங்கள் விரைவாக மாறக்கூடும். ஆனால் அது இங்கு மிகுந்த தொலைவில் இருந்தது. சில விஷயங்களை நாங்கள் சரியாக செய்யவில்லை. முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும் எங்களால் எதிரணியை வீழ்த்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்