இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி - டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
*1 சவரன் - ரூ.87,040
* 1 கிராம் - ரூ.10,880
இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே அவமானம் - டிரம்ப்
தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாக். உட்பட 8 போர்களை நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் எதுவும் செய்யாத ஒருவருக்கு பரிசு வழங்குவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். வரும் அக்.10ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஜன சதாப்தி ரெயிலில் பயணம் செய்த 4 வயது சிறுமி நிவாஷினி மற்றும் அவரது தந்தை சூர்யா ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதி, விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப் பாடங்களில் ஆர்எஸ்எஸ் குறித்த பாடங்களை சேர்க்கிறது டெல்லி அரசு
டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்த பாடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'ராஷ்ட்ரநீதி' என்ற புதிய கல்வித் திட்டத்தின் கீழ், டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
$500 பில்லியன் (ரூ.44 லட்சம் கோடி) சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் எலான் மஸ்க்
சுமார் $500 பில்லியன் (ரூ.44 லட்சம் கோடி) நிகர சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் என்ற சாதனையை படைத்தார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். Forbes நிறுவனத்தின் சமீபத்திய பில்லியனர்கள் குறியீட்டின்படி, மஸ்க்கின் சொத்து மதிப்பு $500 பில்லியனாக (ரூ.44 லட்சம் கோடி) உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மதுரை: மொபைல் விற்பனை கடையில் தீ விபத்து
மதுரை: மீனாட்சி பஜாரில் இயங்கி வந்த மொபைல் விற்பனை கடையில் தீ விபத்து. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக விபத்து என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு; 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு (காஷ்மீரின் முசாஃபராபாத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.)
கத்தாருக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம்
சமீபத்தில் கத்தார் மீது இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அந்நாட்டுக்கு நேட்டோ வகை பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கியது அமெரிக்க அரசு. கத்தார் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும், இனி அமெரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.