தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி உள்பட 39 பேர் இடம்பெற்றுள்ளனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கும் தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப்பின் மரப்புப்படி நடைபெறும் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணித்துள்ளன. அம்பேத்கர் விவாகாரத்தை சுட்டிக்காட்டி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மாணிக்கம் தாக்கூர் எம்.பி. கூறியுள்ளார்.
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழுக்கமிட்டதால் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது. வந்தே மாதரம் பாடல் ஒலித்ததால் முழுக்கத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் அமைதியாக நின்று மரியாதை அளித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மின்சாரம் பாய்ந்து 10வயது சிறுமி உயிரிழந்தார். காட்டு யானைகள் வராமல் தடுக்க வைக்கப்பட்டிருந்த மின் வயரை தொட்டதால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி திவ்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான முடிவுற்ற 599திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாவிட்டால் திராவிட இயக்கமே இல்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை கேரள மக்களும் பாராட்டுகின்றனர் என்றார்.
புனேவில் பஸ் பயணத்தின் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பெண் ஒருவர் 26 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் நிகழந்துள்ளது.
சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை 2 மணி நேரத்திற்கு பிறகு சீரானது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததையும் மீறி கொலை நடந்துள்ளது. கொலை தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது