அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்து வரும் தொடர் விடுமுறையை ஒட்டி வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர். இந்தநிலையில்,
டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அப்படி பார்த்தால் ஜனவரி 2-ம் தேதி வியாழன் அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அரையாண்டு விடுமுறையிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையும், ஜனவரி 1, 2025 ஆங்கிலப் புத்தாண்டும் வந்துவிடுகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் 2 நாட்கள் அரசு விடுமுறையை தவறவிடும் நிலை காணப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது
அம்பேத்கர் குறித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா-வை கண்டித்தும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.20) பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மென்பொறியாளர், சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி விழுந்ததில், கண்டெய்னர் லாரியின் கீழ் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த நபர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் (36) என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றம் வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம்
அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் வெளியே இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதால் விஜய் சவுக் பகுதியில் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ராஜேந்திரன் நலம் விசாரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து, அதில் சிக்கி காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்பேத்கரை அவமதித்து அமித்ஷா பேசியதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். மதுரை - செங்கோட்டை பயணிகள் ரெயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.