நவராத்திரி விழா தொடங்கியது: பிரதமர் மோடி வாழ்த்து
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று (புரட்டாசி மாதம் 6-ம் நாள்) ஆரம்பமாகிறது. இன்று முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சென்னை ஒன்று' செல்போன் செயலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (கும்டா) 2-வது ஆணைய கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த ‘கியூ.ஆர்.’ பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
வாழ்க்கையில் மறக்க முடியாத வலி அது... - அனுபமா
தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நடிகை அனுபமா.
ஜிஎஸ்டி வரி குறைப்பு பலன்கள் கிடைக்கவில்லையா? புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய ஜிஎஸ்டி நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி நிறுவனங்களுக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி,ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் ஜிஎஸ்டி குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தூய்மையான நகர் என்ற பெருமையை பெற்றது இந்தூர் நகரம். இந்நிலையில், அந்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்ற 2 பெண் குழந்தைகளை எலி கடித்ததும், அதன்பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அவை உயிரிழந்ததும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், 2 பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
75 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிக பெரிய அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு.வில், எலி கடித்தபின்பு, 2 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஜெய் ஆதிவாசி யுவ சக்தி என்ற பழங்குடி அமைப்பு காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. அந்த அமைப்பினர், மருத்துவமனையின் நுழைவு வாசலின் முன் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் நேர்காணல் நடைபெற இருந்தது. இந்த நேர்காணல் அரசிடமிருந்து வயது நிர்ணயம் செய்வது தொடர்பான புதிய அறிவுரைகள் பெறப்பட்டுள்ள காரணங்களுக்காக, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திருத்தப்பட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்து, பணி நியமனம் தொடர்பான நடைமுறைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பணிக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான வயது 32, பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினருக்கான வயது 39 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது வரம்பு 42 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில், கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை வருவாய் துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.
தயவுசெய்து அதை நிறுத்துங்கள்... - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மேகா ஷெட்டி
'பிக் பாஸ்' கன்னட சீசன் 12 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளநிலையில், அதில் பங்கேற்க உள்ளதாக பலரது பெயர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை மேகா ஷெட்டியின் பெயரும் இருந்தது.
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,880-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இயக்குனராக அறிமுகமான ஆர்யன் கான் - நடிகை சுஹானா கான் பாராட்டு
இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் ஆர்யன் கானை அவரது சகோதரியும் நடிகையுமான சுஹானா கான் பாராட்டி இருக்கிறார்.
''அப்போதும், இப்போதும் அனுஷ்கா அற்புதம்தான் - நடிகை சுனைனா
இஞ்சி இடுப்பழகி படத்திற்குப் பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சினிமா வாழ்க்கை பாதிப்படைந்துவிட்டதாக பதிவிட்ட எக்ஸ் பயனருக்கு நடிகை சுனைனா பதிலளித்துள்ளார்.