''செயற்கை நுண்ணறிவை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்'' - ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர், செயற்கை நுண்ணறிவு ( AI) தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
''இளவரசிபோல் உணர்கிறேன்'' - நடிகை பிரியா
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பரியா அப்துல்லா, கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ''ஜாதி ரத்னலு'' படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தியிலும் ரிலீசாகும் ''பேட் கேர்ள்''
காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பேட் கேர்ள்'.
"கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா" பாடல்...எஸ்.ஜே சூர்யா சொன்ன விளக்கம்
குஷி படத்தில் இடம்பெறும் கட்டிப்பிடிடா பாடல், செந்தமிழ் தேன்மொழியால் பாடலின் கருவில் இருந்து உருவானதாக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் 29-ந்தேதி போராட்டம்
அரசு பள்ளிகளில் 2009 மே 31-ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.
லெபனானில் நள்ளிரவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
அமெரிக்கா தலைமையில், கடந்த ஆண்டு நவம்பரில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், லெபனான் நாட்டின் தெற்கே பின்ட் பெய்ல் நகர் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் நள்ளிரவு தொடங்கி கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளன.
போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லெபனானின் என்.என்.ஏ. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், டிரோன் தாக்குதலில் மோட்டார் சைக்கிள், வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. 2 பேர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளது.
இதில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி ஆனார்கள். அவர்கள் செலின், ஹதி மற்றும் அசீல் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்களும், அவர்களுடைய தந்தையும் அமெரிக்க குடிமக்கள் ஆவர். இந்த தாக்குதலில், அவர்களுடைய தாயார் காயமடைந்து உள்ளார்.
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர்.
சென்னையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் காயம்
பேருந்து தண்டீஸ்வரம் அருகே வந்துகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் 7 பயணிகள் காயமடைந்தனர்.
மின்சார வாகனங்கள் இருக்கன்றன; சார்ஜிங் நிலையங்கள்தான் இல்லை!
இந்தியா முழுவதும் இப்போது மின்சாரத்தில் இயங்கும் 15 லட்சத்து 81 ஆயிரம் கார்களும், 54 லட்சத்து 81 ஆயிரம் இருசக்கர வாகனங்களும் இருக்கின்றன. அதில் தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரத்து 716 இருசக்கர வாகனங்களும், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 564 கார்களும் இருக்கின்றன. பெட்ரோல்-டீசலைவிட மின்சார வாகனங்களுக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதால் புதிதாக கார் வாங்குபவர்கள் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மின்சார வாகனங்களையே நாடுகிறார்கள். ஆக மின்சார வாகனங்களுக்கு குறைவில்லை. ஆனால் அதில் உள்ள பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களின் பற்றாக்குறைதான் பெரும் இடர்பாடாக இருக்கிறது. சீனாவை எடுத்துக்கொண்டால் 3 முதல் 6 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையமும், நெதர்லாந்தில் 2 முதல் 7 வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையமும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் சராசரியாக 65 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் தான் இருக்கிறது.
திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
இந்து தர்மார்த்த ஸ்மிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.