‘எச்1-பி’ விசா கட்டணம் உயர்வு எதிரொலி: துபாய் வழியாக இந்தியா வரும் விமான பயணங்கள் ரத்து
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசா கட்டணம் சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலராக ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தியதன் எதிரொலியாக துபாய் வழியே இந்தியா வரும் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் முன்பதிவு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது.
இந்த வார விசேஷங்கள்: 23-9-2025 முதல் 29-9-2025 வரை
23-ந் தேதி (செவ்வாய்)
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலம்.
* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், அருப்புக் கோட்டை சவுடாம்பிகை அம்மன் தலங்களில் நவராத்திரி அலங்கார சேவை.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்? அண்ணாமலை விளக்கம்
நேற்று பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்துவிட்டு, மாற்றுக் காரில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட் டுக்கு அண்ணாமலை சென்றார். அங்கு டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்திப்பின்போது, கூட் டணியில் தொடர்ந்து இருக்குமாறு தினகரனை அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அப்போது, பழனி சாமியை தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பதில் டிடிவி தினகரனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.
''அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது'' - ''காந்தாரா'' பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்
நடிகை ருக்மிணி வசந்த், ''காந்தாரா சாப்டர் 1'' படத்தின் பிரஸ் மீட்டின்போது , படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கலந்துகொண்டார். அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது அவர் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப் படுத்த வேண்டும் - ராமதாஸ்
குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெண்களை மையப்படுத்திய கதையில் நடிகை மேகா ஷெட்டி?
பழம்பெரும் இயக்குனர் எஸ்.மகேந்தர் , நடிகை மேகா ஷெட்டியுடன் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
தீபாவளி பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் கள ஆய்வு
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்து. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ரஷியாவிடம் இருந்து 5-வது ‘எஸ்-400’வான் பாதுகாப்பு அமைப்பு எப்போது கிடைக்கும்? வெளியான தகவல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
குஜராத்: துறைமுகத்தில் காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு கப்பல்
குஜராத்தின் போர்பந்தர் நகரில் உள்ள போர்பந்தர் துறைமுகத்தில் கடலோரத்தில் நின்றிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் இன்று காலை திடீரென தீப்பிடித்து கொண்டது. கப்பலில் 15 பேர் இருந்துள்ளனர். அவர்கள் பயத்தில் அலறினார்கள்.