சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப்போகும் பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது பாகிஸ்தான்
இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்கிறார்
இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளார் ராணுவ தளபதி திவேதி.
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
போரை நிறுத்தும் வகையில் 1972ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது.
நதிநீரை நிறுத்துவது போருக்கு நிகரானது என பாகிஸ்தான் கூறிய நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது
பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை
இந்திய கடற்படை வெளியிட்டுள்ள பதிவில்,"இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது நமது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு
2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16-ஆம் தேதி (திங்கள் கிழமை) திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே இன்று அதிகாலை ரஷிய ராணுவம் மாபெரும் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனது மனைவிக்காக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் - சூர்யகுமார் யாதவ்
தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், "எனது மனைவி இந்த ஆட்டத்தை பார்க்க மும்பையிலிருந்து இங்கு (ஐதராபாத்) வந்துள்ளார். அதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். அவர் இங்கே இருந்ததால் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதால் அதை தொடர்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இன்று (24-04-2025) மற்றும் (நாளை) 25-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.