பீகார்: ஆற்றில் தவறி விழுந்த சிறுமி; காப்பாற்ற சென்று 5 பேர் பலியான சோகம்
பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் கரி கோசி ஆற்றிற்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் நீரில் இறங்கியபோது, 9 வயது சிறுமி திடீரென கடுமையான நீரோட்டத்தில் சிக்கி கொண்டார்.
இதனால், சிறுமியின் உறவினர்கள் ஒவ்வொருவராக ஆற்றில் இறங்கி சிறுமியை காப்பாற்ற முயன்றனர். இதுபோன்று 4 பேர் ஆற்றில் குதித்து, சிறுமியை காப்பாற்ற முயன்றனர்.
எனினும், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தின் மொத்தம் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காலை உணவு திட்டத்தால் பள்ளிக் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சுதர்சன் ரெட்டி
சுதர்சன் ரெட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் காலை 10.30 மணியளவில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது, துணை ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. எம்.பி.க்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுக்க உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடான சந்திப்புக்கு பின்னர் சுதர்சன் ரெட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளார்.
சிம்மம்
வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே