இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

Update:2025-09-24 10:22 IST
Live Updates - Page 2
2025-09-24 10:36 GMT

''கூலி'' படத்தால் அதிருப்தி...பிரபல நடிகையின் பேச்சால் பரபரப்பு

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரெபா மோனிகா. சமீபத்தில் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ''கூலி'' படத்தில் நடிகர் சத்யராஜின் மகள்களில் ஒருவராக நடித்திருந்தார்

2025-09-24 10:14 GMT

டெல்லி மெட்ரோ ரெயில்களில் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிப்பு

டெல்லி மெட்ரோ ரெயில்களில் ரீல்ஸ் எடுக்கவும், ரெயில் பெட்டிகளுக்குள் சாப்பிடுவது, கீழே உட்காருவது உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-24 10:01 GMT

''ஓஜி'' படத்தில் மேக்கப் போடாமல் நடித்த நடிகை

பவன் கல்யாணின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''ஓஜி'' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுஜீத் இயக்கி உள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்‌சன் படத்தில் பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்திருக்கிறார்.

2025-09-24 09:41 GMT

‘பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்’ - மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடியின் நண்பர்கள் இந்தியாவிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

“சர்வதேச அளவில் நமது நாட்டிற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் தூதரக உறவுகளில் ஏற்பட்ட தோல்வியே காரணம். பிரதமர் 'எனது நண்பர்கள்' என்று பெருமையாகக் கூறும் அதே நண்பர்கள்தான் இன்று இந்தியாவிற்கு ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

2025-09-24 09:23 GMT

செல்ல பிராணிகளுக்குள் சண்டை - விவாகரத்துகோரிய தம்பதி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செல்லப் பிராணிகளுக்குள் சண்டை வருவதால் விவாகரத்து கோரிய தம்பதியால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவர் 2 நாய்கள், முயல், மீன் ஆகியவற்றை வளர்த்து வரும் நிலையில், மனைவி வளர்க்கும் பூனை மீனை சாப்பிட முயற்சிப்பதுடன், நாய்களின் உணவையும் திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மனைவியோ நாய்கள் குரைத்து அவரின் பூனையை பயமுறுத்துவதாக கூறியுள்ளார். இதனால் காதலித்து திருமணம் செய்த இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

2025-09-24 09:09 GMT

''ஜெயிலர் 2''...ரிலீஸ் தேதியைச் சொன்ன ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். 

2025-09-24 08:50 GMT

''96'' படத்தின் 2ம் பாகம் - மனம் திறந்த இயக்குனர் பிரேம் குமார்

'96' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி பிரேம் குமார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதனையடுத்து, அதன் 2-ம் பாகம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2025-09-24 08:19 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்: ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு


6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


2025-09-24 08:18 GMT

“நான் இருக்கிறேன்.. தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்..”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய தான் இருக்கிறேன் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று முதல்-அமைச்சர் கூறினார்.


2025-09-24 07:27 GMT

“மோடிபோலதான் விஜய்” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு மக்களுக்கு பயன்தரும் என்கிறார்கள். ஆனால், இந்த வரியை விதித்தது யார்? இது சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். எனில் உங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேளுங்கள். மக்களுக்கு சுமையாக இருக்கிறது என தெரிந்தும் வரியை விதித்த நீங்கள் என்ன தலைமையாளர்கள்?.. தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம், குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கிறீர்கள். இந்த நாட்டில் பிறந்ததை தவிர்த்து நாங்கள் வேறு என்ன பிழை செய்தோம்?.

நான் விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது, ஒரு அண்ணனாக தம்பிக்கு அறிவுரைகளை சொல்கிறேன். இப்போது சரி செய்து கொள்ளவில்லை என்றால் வேறு அரசியல் கட்சிகள் எடுத்துச்சொல்லுவார்கள்.

சின்னப்பிள்ளைங்க பக்குவப்பட வேண்டும். பொதுவெளியில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துதான் ஆக வேண்டும். கேள்வி கேட்டாலே இப்படி சொல்லலாமா?. தவெக தொண்டர்கள் எனது தம்பி தங்கைகள். தவெகவினர் விமர்சிப்பதைப் பார்த்து ரசித்துவிட்டு செல்ல வேண்டியது தான். பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் கொள்கை வித்தியாசம் என்ன? கொள்கை வேறு, அரசியல் வேறு கிடையாது கொள்கைதான் அரசியல் . பாஜக உங்கள் கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா?

மோடி எப்படி தமிழ் பேசுகிறாரோ, எப்படி திருக்குறள் பற்றி பேசுகிறாரோ, அதுபோலதான் மீனவர்கள் மீதான விஜயின் அக்கறை

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்