இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

Update:2025-09-24 10:22 IST
Live Updates - Page 5
2025-09-24 05:07 GMT

புதினுடனான நட்பால் உக்ரைன் போர் எளிதில் முடிவுக்கு வரும் என நினைத்தேன்; ஆனால்... டிரம்ப் வேதனை


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தில் 80-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு பேசினார்.


2025-09-24 05:06 GMT

பீகார் சட்டசபை தேர்தல்; தனித்து போட்டியிட ஓவைசி திட்டம்

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, பீகாரில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சிக்கு 3 முறை கடிதம் எழுதியபோதிலும், அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பீகாரில் 'சீமாஞ்சல் நியாய யாத்திரை' என்ற பெயரில் 3 நாள் பிரசாரத்தை ஒவைசி நேற்று தொடங்கினார். இதனால் ஒவைசி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025-09-24 05:04 GMT

பீகாரில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்; தலைவர்கள் வருகை


ராகுல் காந்தி சமீபத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வாக்கு திருட்டு பற்றி பேசியபோது. ஹைட்ரஜன் குண்டு வெடிக்க இருக்கிறது என பேசி இருந்தார். 

2025-09-24 05:03 GMT

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை


மாணவர்களின் மனதையும், உடலையும் பாழ்படுத்தும் சமூக வலைத்தளங்கள், தவறான விளம்பரங்கள். ஒழுக்கக்கேடான இணைய தளங்கள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நற்பண்புகளை வளர்க்கும் கல்வி மிக அவசியமானதாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 


2025-09-24 05:00 GMT

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்


இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் தீவிரமாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


2025-09-24 04:58 GMT

பிரான்ஸ் அதிபரை அமெரிக்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.


2025-09-24 04:57 GMT

கட்டுக்கடங்காமல் செல்லும் தங்கம் விலை.. தொடர்ந்து உயர்வதற்கான காரணம் என்ன?


தங்கம் விலை கடந்த 18 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.6 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


2025-09-24 04:56 GMT

2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழக அரசு


2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.


2025-09-24 04:54 GMT

90-வது பிறந்த நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


2025-09-24 04:53 GMT

ராசிபலன் (24-09-2025): “காதலில் சிக்கி கொள்ளாமல் இருப்பது நல்லது” - எந்த ராசிகாரர்களுக்கு தெரியுமா..?

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். சிறு தூர பயணம் ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

Tags:    

மேலும் செய்திகள்