இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

Update:2025-08-25 09:06 IST
Live Updates - Page 3
2025-08-25 07:31 GMT

தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி கல்லூரியில் ஏ.சி. வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி கல்லூரியில் ஏ.சி. வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ.174 கோடியில் 19 புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்-அமைச்சர், தலைமை செயலகத்தில் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் ரூ.51 கோடியில் கல்விசார் கட்டடங்களையும் முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். நெல்லை மானூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டடம் ,வால்பாறையில் சிங்காரவேலர் ஓய்வு இல்லமும் திறந்து வைக்கப்பட்டது.

2025-08-25 07:27 GMT

சென்னையில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு

தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம் செல்லக் கூடிய வழித்தடத்தில் மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்துள்ளது. மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததால் மின்சார ரெயில்கள் அந்தந்த ரெயில் நிலையங்களில் அரைமணி நேரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

2025-08-25 07:22 GMT

கவினின் பெற்றோர் முதலமைச்சருடன் சந்திப்பு

நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் பெற்றோர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு

கவின் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய முதல்வரிடம் கவின் பெற்றோர் கோரிக்கை

2025-08-25 07:09 GMT

பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளார்.

2025-08-25 07:05 GMT

துயரத்தில் திரையுலகம்... ''கேஜிஎப்'' பட நடிகர் காலமானார்

கன்னட திரைத்துறையின் மூத்த துணை நடிகர் தினேஷ் மங்களூரு(55) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மூளைப் ‌ பக்கவாதத்தால் குந்தாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு காலமானார்.

2025-08-25 06:59 GMT

விஜயகாந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள்

மறைந்த தேமுதக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக கொடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஏற்றி வைத்தார். அதன்பின் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் பிரேமலதா வழங்கினார்.

2025-08-25 06:04 GMT

இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகியது டிரீம் 11

இந்திய அணி டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முடித்து கொள்வதாக டிரீம் 11 அறிவித்துள்ளது. டைட்டில் ஸ்பான்சரில் இருந்து டிரீம் 11 விலகியதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலி தடை சட்டம் எதிரொலியாக டிரீம் 11 நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் பிசிசிஐ உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என்றும் விரைவில் புதிய ஸ்பான்சர்களுக்கான ஒப்பந்தம் கோரப்படும் என்றும் தேவஜித் சைக்கியா, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

2025-08-25 05:59 GMT

ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? - அமித்ஷா விளக்கம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தனிப்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாகவே ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். வேறு காரணமில்லை; ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் வேறு எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கக்கூடாது. தனது பதவிக் காலத்தில் ஜெகதீப் தன்கர் சிறப்பாகவே செயல்பட்டார்.

லாலு பிரசாத்தை காப்பாற்ற மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை கிழித்து எறிந்தவர் ராகுல் காந்தி. 130-வது சட்ட திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது நியாயமா?. பிரதமர், முதல்-மந்திரியின் பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிச்சயமாக நிறைவேறும். பதவி பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

2025-08-25 05:39 GMT

பாடகி கெனிசாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்