இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

Update:2025-08-25 09:06 IST
Live Updates - Page 4
2025-08-25 05:33 GMT

ரெயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் - போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தை கடந்த போது கற்கள் வைக்கப்பட்ட‌து தெரியவந்தது. ரெயில் சக்கரம் ஏறியதில் சிமெண்ட் கற்கள் உடைந்து சிதறியது. ரெயிலை கவிழ்க்க முயற்சியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை ஆவாரம்பாளையம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2025-08-25 05:01 GMT

சென்னையில் அதிமுக நிர்வாகிகள் மோதல்

சென்னை பெரவள்ளூர் கேசி கார்டனில் அதிமுக நிர்வாகி வினோத்குமார் மீது மிளகாய்ப்பொடி தூவி தாக்கிய அக்கட்சியின் சக நிர்வாகி வாசுதேவன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சி கலந்தாய்வின்போது வினோத்குமாருக்கும் வாசுதேவனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பழிதீர்த்துக் கொண்டதாக வாசுதேவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2025-08-25 04:59 GMT

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை

திருச்சி துறையூரில் ஈபிஎஸ் கூட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆம்புலன்ஸ்-க்கு அழைத்தது யார் என்பது குறித்த தகவல்களை காவல்துறை திரட்டி வருகிறது. உண்மையாகவே கூட்டத்தில் மயங்கி விழுந்தவரை அழைத்துச் செல்லத்தான் ஆம்புலன்ஸ் அழைப்பா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2025-08-25 04:52 GMT

கடலூரில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உடனடியாக வந்து வேனை தூக்கி அகற்றினர். வேன் கவிழ்ந்த நேரத்தில் ரெயில் ஏதும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

2025-08-25 04:51 GMT

சென்னையில் நாய் கடித்துக் குதறியதில் முதியவர் காயம்

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு இடையே நடந்த சண்டையின்போது அவ்வழியே நடந்து சென்ற 77 வயது முதியவரை கடித்துக் குதறியது. நாய் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனுக்கு 9 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2025-08-25 04:49 GMT

சுதர்சன் ரெட்டியை விமர்சித்த அமித்ஷாவுக்கு முன்னாள் நீதிபதிகள் கண்டனம்

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. இந்த நிலையில் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னாள் நீதிபதிகள் குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.

2025-08-25 04:48 GMT

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்: திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- “பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து பிராண்டிய அக்கட்சியினர் தற்போது அதே கருத்தை விஜய் கூறும்போது அமைதியாக இருப்பது ஏன்?. அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

2025-08-25 04:46 GMT

பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல. பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம்ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

2025-08-25 04:27 GMT

''அந்தக் காட்சிக்கு 28 டேக்குகள்...இப்போதும் அதை நினைத்தால்''...- வித்யா பாலன்

பிரதீப் சர்க்கார் இயக்கிய ''பரினீதா'' (2005) படத்தில் நடித்தபோது தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி வித்யா பாலன் மனம் திறந்து பேசினார். ஒரு காட்சியில் நடிக்க தான் 28 டேக்குகள் எடுத்ததாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்