8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் புயலாகவும் வலுவடையக்கூடும். அதேபோல், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான வருகின்ற 26.10.2025 மற்றும் 27.10.2025 ஆகிய இரு தினங்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மேற்சொன்ன இரண்டு தினங்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மேற்சொன்ன இரண்டு தினங்களில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து ராணி காலமானார் - தலைவர்கள் இரங்கல்
தாய்லாந்தில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி சிரிகிட் கிடியாகரா நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராணி சிரிகிட் மறைவையடுத்து மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ராணி சிரிகிட் கிடியாகராவின் கணவரான தாய்லாந்து முன்னாள் மன்னர் அதுல்யடிஜ் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்
இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த நிலையில் இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில் இருந்து 990 கி.மீ. தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அது 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. வானிலை ஆய்வு மையம் புயல் உருவான பிறகே அந்த பெயரை அறிவிக்கும். ‘மோன்தா' என்ற பெயர் தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும். இந்த பெயருக்கு ‘அழகான மலர்' அல்லது ‘மணம் வீசும் மலர்' என்று அர்த்தம்.
ராதிகாவின் புதிய படம்...மோஷன் போஸ்டர் வெளியீடு
பீட்சா, சூது கவ்வும், அட்டகத்தி, சரபம், இறுதிச் சுற்று, போன்ற படங்களை தயாரித்தவரும் மாயவன் படத்தை இயக்கியவருமான சி.வி. குமார் இயக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் ஆகிய பதாகைகளின் கீழ் எம்.கே. சாம்பசிவம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.
(XY) எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நடிகை ராதிகா ரவீந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் எகிறி வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. இப்படியே போனால் எப்படி தங்கம் வாங்குவது? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடியது. இந்த நிலையில், கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.3,680-ம் அதிரடியாக சரிந்து, ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ. தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை. அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattor Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
ஈரப்பதத்தால் வாடும் விவசாயிகள்
காவிரி நதியினால் வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்கள்தான் தமிழகத்தின் நெல் களஞ்சியமாக திகழ்கின்றன. அதனால்தான் 'சோழ நாடு சோறுடைத்து' என்ற முதுமொழி பண்டைய காலந்தொட்டே சொல்வழக்கில் இருந்துவருகிறது. இங்கு குறுவை, சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிகள் ஆண்டுதோறும் நடக்கிறது. மேட்டுர் அணையில் நடப்பாண்டு முழுவதும் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்ததால், காவிரி நீர் கடைமடை வரை பெருக்கெடுத்து ஓடியது. இதுமட்டுமல்லாமல் பருவமழையும் கைகொடுத்தது. இதனால் தண்ணீர் பஞ்சம் மிஞ்சித்துமில்லாமல் விவசாயம் செழித்ததால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் குறுவை சாகுபடி இருந்தது. கடந்த ஆண்டு குறுவையில் நெல் சாகுபடி 3.80 லட்சம் ஏக்கரில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் 6.31 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடையும் தொடங்கியிருக்கிறது.
கந்தசஷ்டி விழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வெள்ளைசாத்தி வீதி உலா
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கடந்த 22-ந் தேதி கந்தசஷ்டி விழா யாகசாலையுடன் தொடங்கியது. விழாவின் 3-வது நாளான நேற்று யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வெள்ளைசாத்தி அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பின்னர் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் வள்ளி, தெய்வானைக்கு சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் சண்முகம் பட்டர் ஆகியோர் தலைமையில் ஆறுமுக லட்சார்ச்சனை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 27-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.