இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-05-2025

Update:2025-05-26 09:16 IST
Live Updates - Page 2
2025-05-26 12:23 GMT

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் கனமழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் மக்கள் குளிக்க, நீர்நிலைக்கு அருகே செல்ல, மணிமுத்தாறு அருவியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-05-26 11:30 GMT

10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பரிசளிக்கிறார்.முதல்கட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில், மாணவ-மாணவியருக்கு விஜய் பரிசளிக்கிறார்.முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2 கட்டங்களாக பரிசளிப்பு விழா நடந்த நிலையில் இம்முறை 3 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025-05-26 11:01 GMT

மாநிலங்களவைத்தேர்தல்: ஜூன் 2-ம் தேதி கமல் மனு தாக்கல்?

தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடியவுள்ளதால் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவைத்தேர்தலில் ஜூன் 2-ல் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 2-ல் தேர்தல் அறிவிக்கை, ஜூன் 9 வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-26 10:57 GMT

குட்கா,புகையிலை தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

குட்கா,பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2026 மே மாதம் 23-ம் தேதி வரை தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2025-05-26 10:36 GMT

மராட்டியம் கனமழை : மும்பை, தானே, ராய்காட், புனே உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2025-05-26 10:29 GMT

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்றும்,நாளையும் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-05-26 10:27 GMT

கேரளாவில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது. மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-05-26 09:36 GMT

கடலில் கவிழ்ந்த கப்பல்- பேரிடர் மீட்புக் குழு விரைவு

கேரளா: கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்க அரக்கோணம் பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 பேர் கொண்ட குழு கொல்லம் சென்றது. கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கொல்லம் அருகே கரை ஒதுங்கிய நிலையில் மீட்பு பணிக்காக விரைந்துள்ளது.

2025-05-26 09:35 GMT

ஒரே நாளில் 9 குழந்தைகளை பறிகொடுத்த பெண் டாக்டர்

காசாவில் உள்ள பெண் டாக்டர் ஒருவரின் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலால், 9 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர். 10 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே உயிர் தப்பியுள்ளது. கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ நேரத்தில் பெண் டாக்டர் பணிக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.

2025-05-26 08:38 GMT

தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும். இதன்படி, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும். வேட்பு மனு பரிசீலனை ஜூன் 10-ந்தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூன் 12-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தல் ஜூன் 19-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணியளவில் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்