மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவின் மனைவிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேஜஸ்வியின் குழந்தையையும் மற்றும் குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக நேரில் சென்றார்.
எம்.பி. சீட்: பொறுத்திருந்து பார்ப்போம் - பிரேமலதா
தற்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை 28 நிமிடங்கள் 43 விநாடிகளில் (28:43.84) கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பான், பஹ்ரைன் வீரர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்க கூடாது - இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தால் அதனை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார்.
அதிமுக, இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் எடுக்காததை குறிப்பிட்டு புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரியில் தொடரும் ரெட் அலர்ட்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அருவியில் குளித்த 2 பேர் மரக்கிளை விழுந்து உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டைகர் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென விழுந்த மரக்கிளை. மரக்கிளை விழுந்ததில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
5ம் தலைமுறை போர் விமானம் - முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் 5ம் தலைமுறை போர் விமானம், அரசு - தனியார் கூட்டாண்மையில் உருவாக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இதன் வெற்றி 'தன்னிறைவு இந்தியா' திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) அரசு - தனியார் கூட்டாண்மையில் உருவாக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சியுடன், தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட பாதுகாப்புத்துறை மந்திரி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மனநலன் குன்றிய இளைஞர் கொலை வழக்கு: 8 தனிப்படைகள் அமைப்பு
பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில் தலைமைறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 5 பேரை பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்த போலீசார். ஜென் ஹீலிங் நிர்வாகி கவிதா லட்சுமணன், ஷாஜி உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
செல்போன் கொள்ளை - ஐ.டி. ஊழியர் படுகாயம்
செங்கல்பட்டு அருகே பரனூர் பகுதியில் செல்போன் பறித்த கொள்ளையர்களால் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஐ.டி. ஊழியர் படுகாயம் அடைந்தார். ஐ.டி. ஊழியர் தலை மற்றும் முதுகுத்தண்டில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஐ.டி. ஊழியர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உதகை - கல்லட்டி மலை பாதை சேதம்
உதகையில் தொடர் கனமழை காரணமாக பெரிய அளவிலான பாறைகள் விழுந்ததால் உதகை - கல்லட்டி மலை பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளது. 15 மணி நேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.