இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

Update:2025-08-28 09:12 IST
Live Updates - Page 5
2025-08-28 05:27 GMT

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? இஸ்ரோ தலைவர் பதில்


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டின் 2-வது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது.


2025-08-28 05:26 GMT

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (29.08.25)


தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால்தான். அந்தவகையில் நாளை (ஆகஸ்ட் 29ந் தேதி) திரையரங்குகளில் 9 திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

2025-08-28 05:23 GMT

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு


இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளித்துறை பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பருத்தி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 30ம் தேதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.


2025-08-28 05:12 GMT

அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்


ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான 2023-24 நிதியாண்டுக்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) முடிவுகளை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டது

அதில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2வது இடத்தில் குஜராத், 3வது இடத்தில் மகாராஷ்டிரா, 4வது இடத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் 5வது இடத்தில் கர்நாடகா மாநிலமும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி நாட்டின் வேலைவாய்ப்புகளில் மாநிலங்களின் பங்களிப்பில் தமிழ்நாடு 15 சதவீதம் பங்கைக் கொடுத்துள்ளது என்றும், குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்தரப்பிரதேசம் (8%) மற்றும் கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-28 04:45 GMT

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா.. நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் - குவியும் பக்தர்கள்


நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

2025-08-28 04:44 GMT

தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்: பிரசாந்த் கிஷோர் தாக்கு


முதல்வர் மு.க. ஸ்டாலினின் பீகார் பயணத்தை, தேர்தல் வியூக நிபுணரும் ஜனசுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள். அப்போது ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை; 'கூலி வேலை செய்வது பீகாரிகள் மரபணுவில் உள்ளது' என்று ரேவந்த் ரெட்டி பேசினார். அவரை காங்கிரஸ் கவுரவிக்கிறது. பீகாரிகளை அவமதிப்பவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது" என்று விமர்சித்துள்ளார்.


2025-08-28 04:42 GMT

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: சுப்மன் கில் தொடர்ந்து நம்பர் 1.. ஆஸி.வீரர்கள் முன்னேற்றம்


பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாபர் அசாம் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் தொடருகின்றனர். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார்.


2025-08-28 04:40 GMT

இந்தியாவுக்கு எதிராக வரி ; அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்கக்கூடாது; எச்.ராஜா


ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சதுர்த்தி சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், “அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்குகிறது. ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும். ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது” என்று தெரிவித்தார். 


2025-08-28 04:39 GMT

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது


வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால். இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


2025-08-28 04:37 GMT

அதிவேகமாக காரை ஓட்டிய துருக்கி போக்குவரத்து மந்திரிக்கு அபராதம்


துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல்காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஒட்டி கொண்டு சென்றார்.

அப்போது அவர் கார் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டபடியும், நாட்டின் அதிபர் எரோடகனின் பிரசாரத்தை கேட்டபடி சென்றார். மேலும் காரை மணிக்கு 180 முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் இயக்கினார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்