இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025

Update:2025-11-28 09:12 IST
Live Updates - Page 6
2025-11-28 04:03 GMT

'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடக்கம் 


'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

2025-11-28 04:02 GMT

தனக்கு பிடித்த 10 விஷயங்கள்...பட்டியலிட்ட நடிகை ருக்மிணி வசந்த் 


தனக்கு மிகவும் பிடித்த 10 விஷயங்களை நடிகை ருக்மிணி வசந்த் பட்டியலிட்டுள்ளார்.

2025-11-28 03:57 GMT

நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் 


இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.

2025-11-28 03:55 GMT

’அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி’ - மாளவிகா மோகனன் 


மாளவிகா மோகனன் ’தி ராஜா சாப்’ படத்தில் தனது கபாத்திரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

2025-11-28 03:54 GMT

இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்? 


திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து. பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. 

2025-11-28 03:52 GMT

முத்தரப்பு டி20: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி 


பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. 

2025-11-28 03:50 GMT

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: சென்னை, மதுரையில் இன்று தொடக்கம் 


சென்னையில் மொத்தம் 41 ஆட்டங்களும், மதுரையில் 31 ஆட்டங்களும் அரங்கேறுகின்றன.

2025-11-28 03:48 GMT

ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை 


ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2025-11-28 03:46 GMT

தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’.. மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்கிறது 


புயல் காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-28 03:44 GMT

இன்றைய ராசிபலன் (28.11.2025): புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்..! 


மகரம்

ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். பழுதான வாகனம் சரி செய்வீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Tags:    

மேலும் செய்திகள்