இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

Update:2025-08-29 09:14 IST
Live Updates - Page 2
2025-08-29 10:36 GMT

இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை... சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்தது

இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,535-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-08-29 10:33 GMT

''என்னை அப்படி கூப்பிடாதீர்கள்'' - ''அனுமான்'' பட நடிகர்

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படங்களில் ஒன்று ''மிராய்''. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் ''அனுமான்'' பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

2025-08-29 10:16 GMT

இரட்டை இலை விவகாரம் - டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைந்து பதில் அளிக்காதது ஏன்? என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2025-08-29 10:00 GMT

ஒரே நாளில் வெளியாகும் தனது படங்கள் - பிரதீப் ரங்கநாதன் சொன்ன வார்த்தை

தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன், ''லவ் டுடே'' மற்றும் ''டிராகன்'' ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

2025-08-29 09:18 GMT

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ''ஜெயிலர்'' பட நடிகை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மிர்னா மேனன் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

2025-08-29 08:38 GMT

''மனுஷி'' பட வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ''மனுஷி'' படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

2025-08-29 08:21 GMT

ஆந்திரா: சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிப்பு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம்புரண்ட இடத்தில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விஜயநகரம் சிக்னேச்சர் பாலத்தில் ஒரு சரக்கு ரெயில் தடம் புரண்டதால், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றன. தடம்புரண்ட சரக்கு பெட்டிகள் அகற்றப்பட்டு, விரைவில் ரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விபத்து நடக்கும்போது மற்றொரு தண்டவாளத்தில் ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விஜயநகரம் விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் - பலாசா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கோராபுட் வழித்தடங்களில் இயங்கும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2025-08-29 08:16 GMT

ராமர் பால விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்த முடிவை தெரிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவிற்கு 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்