கோபிசெட்டிபாளையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம்
டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயண விவரங்களை அறிந்து கொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
’வாரணாசி’ படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்ட மகேஷ் பாபு
எஸ்.எஸ்.ராஜமவுலியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான வாரணாசியின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மகேஷ் பாபு. தற்போது படப்பிடிப்பிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20: வங்காளதேசம் வெற்றி
வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20தொடரில் 2-வது ஆட்டம் சட்டோகிராமில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
டெல்லி கார் வெடிப்பு: பயங்கரவாதிகள் 4 பேரின் காவல் விசாரணை மேலும் 10 நாள் நீட்டிப்பு
டெல்லியில் கடந்த 10-ந்தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
டெல்லி: கட்டிடத்தில் தீ விபத்து; 4 பேர் பலி
கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் இருந்து தீ பரவி இருக்க கூடும் என நம்பப்படுகிறது.
இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்: 153 பேர் பலி; 200 பேர் மாயம்
நாட்டின் 3-ல் ஒரு பங்கு மக்கள் மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் இன்றி தவித்து வருகின்றனர்.
குரூப்-1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு நாளை தொடங்குகிறது
குரூப்-1, 1ஏ பதவிகளில் 72 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது.
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
டிட்வா புயல் காரணமாக நாகை, காரைக்கால், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. அதைபோல சென்னை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி ஆகிய 5 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.
டிட்வா புயல் எதிரொலி: சூறைக்காற்றுடன் கனமழை.. தமிழ்நாட்டில் இருவர் உயிரிழப்பு
வடகடலோர மாவட்டங்கள்-புதுச்சேரி கடலோர பகுதிகளில் டிட்வா புயல் இன்று மழையை கொடுக்க இருக்கிறது.